நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்


நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 20 Oct 2021 4:52 PM GMT (Updated: 20 Oct 2021 4:52 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 40 முகாம்கள், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 முகாம்கள், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 50 முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளன.
முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மற்றும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 84 நாட்கள் ஆன பொதுமக்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், லாரி டிரைவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்கவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Next Story