விருத்தாசலம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


விருத்தாசலம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:43 PM IST (Updated: 20 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

அழகான பெண் குழந்தை பிறந்தது

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 38). இவரது மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கண்டப்பன்குறிச்சியில் இருந்து வந்த 108 ஆம்புலன்சில் சரண்யாவை ஏற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து டிரைவர் ராகுல், விளாங்காட்டூர் அருகே சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சவுந்தரராஜன், சரண்யாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனே சரண்யா, தனது குழந்தையுடன் அருகில் இருந்த நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் சரண்யாவை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராகுலையும், அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சவுந்தரராஜனையும் பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story