ரேஷன் அரிசியில் செத்துக்கிடந்த எலி


ரேஷன் அரிசியில் செத்துக்கிடந்த எலி
x
தினத்தந்தி 20 Oct 2021 10:49 PM IST (Updated: 20 Oct 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசியில் செத்துக்கிடந்த எலியால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூரில் ரேஷன் கடை உள்ளது. அந்த கடையில் இருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த மாரி (வயது40) என்பவர் அவரது குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டிய 20 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி வீட்டிற்குச் சென்று அந்தப் பையை வீட்டில் வைத்துள்ளார். நேரம் ஆக, ஆக, துர்நாற்றம் வீட்டிற்குள் வீசியுள்ளது. திடீரென வீசிய துர்நாற்றத்தால் ஏதோ வீட்டிற்குள் இறந்து கிடப்பதாக குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் எந்த அறிகுறியும் அவர்களுக்கு தென்படவில்லை. உடனே ரேஷன் அரிசி இருந்த பையை கீழே கொட்டி பார்த்துள்ளனர். அப்போது அந்த அரிசிக்குள் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு மாரியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அந்த அரிசியை வழங்கிய ரேஷன் கடைக்கு கொண்டு சென்று கடைக்காரர்களிடம் விவரத்தை கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அந்த அரிசியை மாரி கடையிலேயே கொட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story