தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). இவரது மனைவி அலமேலு (45). கடந்த 18-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த சங்கர் வீட்டில் இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவி மீதும், தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். வலி தாங்கமுடியாமல் கத்திக்கொண்டே வெளியே வந்தவரை ஊர் பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
பின்னர் தீக்காயம் ஏற்பட்ட இருவரையும் வாலாஜா மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கர் உயிரிழந்தார். அவரது மனைவி சிகிச்சை பெற்று வருகின்றார்.
Related Tags :
Next Story