தலைவர்-கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் தலைவர்- கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடும்பாறை, வருசநாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் கலந்துகொள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரா சந்தோசம் ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் அறையில் தங்கம்மாள்புரம், மூலக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கும், ஒன்றியக்குழு தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு இருந்த ஒன்றிய அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் தி.மு.க. கவுன்சிலர்களும், ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து கவுன்சிலர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் மொத்தம் உள்ள 14 கவுன்சிலர்களில் வருசநாடு, குமணன்தொழு, தங்கம்மாள்புரம் ஆகிய கவுன்சிலர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 8-வது வார்டு கவுன்சிலராக கருப்பையா பதவி ஏற்று கொண்டார். விழாவில் கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் சரவணன், திருப்பதிமுத்து, மேலாளர் தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story