நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
நெய்வேலி,
கடலுர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 11 என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் துரைமுருகன் (வயது 49). இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். துரைமுருகன் ஏற்கனவே நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் காரணமாக சம்பளம் குறைவாக வந்ததால், குடும்ப செலவு மற்றும் 2 மகள்களின் கல்வி செலவுக்கு போதிய பணமின்றி மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த துரைமுருகன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story