சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது


சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 11:23 PM IST (Updated: 20 Oct 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

சங்கராபுரம்

சின்னசேலத்தைச் சேர்ந்த பட்டு மனைவி சிவமலை தனது மகன் ஏழுமலையின் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்துக்கு சமாதானம் பேசவந்தபோது அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 4 பேரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.  இதில் தொடர்புடைய சின்னசேலத்தை சேர்ந்த சின்னதுரை(வயது 46)  தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சின்னதுரை மூரர்பாளையத்தில் அவரது உறவினர் வீ்ட்டு சுப நிகழ்சிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சின்னதுரையை கைது செய்து சங்கராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ராஜசேகர் உத்தரவிட்டதை அடுத்து சின்னதுரையை திருக்கோவிலூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். 

Next Story