பூ வியாபாரி தற்கொலை எதிரொலி கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவு
கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவு
ஆரணி
ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி பிரபு (வயது 35) இவர் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருப்பதாகவும் அதற்கு பட்டா வழங்கும்படியும் விண்ணப்பித்ததில் நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார்.நேற்று முன்தினம் வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து பிரபு தற்கொலை செய்துகொண்டார். இது சம்பந்தமாக களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பட்டா வழங்க அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரச்சினையில் நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை பணியிடைநீக்கம் செய்ய கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளதாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் சுபாஷ் சந்தர் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story