கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதத்தை எட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற 23-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
எனவே இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் தவறாமல் 23-ந் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாகவும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாகவும் உருவாக்க ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story