மின்சாரம் பாய்ந்து பலியானவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல்
மின்சாரம் பாய்ந்து பலியானவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல் நடத்தப்பட்டது
அரவக்குறிச்சி
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் குடிநீர் குழாயை சீரமைத்தபோது மின்சாரம் பாய்ந்து சேந்தமங்கலம் மேல்பாகம் ஊராட்சி செல்லிவலசைச் சேர்ந்த காளிமுத்து மகன் வீரக்குமார் (வயது 32) மற்றும் அஜித்குமார் (25)ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் வீரக்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் பள்ளப்பட்டியில் அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுதொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story