தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 1:37 AM IST (Updated: 21 Oct 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

விபத்து அபாயம்
நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு சிமெண்டு சிலாப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அங்கு விபத்து ஏற்படும் அபாயம்  உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிமெண்டு சிலப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சசிகுமார், பார்வதிபுரம்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது, பெய்த மழையால் உழவர் சந்தை பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு கொசு மருந்து அடித்திடவும், தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றி கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -ராஜ், வடசேரி.
திறந்தவெளியில் மின்ஒயர்கள்
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள பிரபலமான மருத்துக்கடை முன்பு ஒரு மின்கம்பம் இருக்கிறது. இதில் திறந்த வெளியில் மின்வயர்கள் காணப்படுகிறது. மேலும், கம்பத்தில் இருந்து அதிக சத்தமும் கேட்கிறது. பரபரப்பாக காணப்படும் பகுதியில், திறந்த வெளியில் மின்ஒயர்கள் மற்றும் பெட்டிகள் இருப்பது பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை சீரமைக்க வேண்டும்.
                               -கல்யாணராமன், வடிவீஸ்வரம்.
பெயர் பலகையை மாற்ற வேண்டும்
நாகா்ேகாவில் வடசேரியில் வன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து புத்தேரி வரை செல்லும் பாலமோர் சாலையில் பெயர் பலகை வடசேரி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் பொறிக்கப்பட்டுள்ள பெயர் சரியாக தெரியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பெயர் பலகையை சீரமைத்து பாலமோர் சாலை என பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழரசு, ஆரல்வாய்மொழி. 
கோழி கழிவுகளால் துர்நாற்றம்
தேவிகோடு பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்பாலை சந்தையில் தனியாருக்கு சொந்தமான ஒரு உரக்கிடங்கு உள்ளது. அதில் கோழிக்கழிவுகள் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக ெசல்லும் பொதுமக்கள், குழந்்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, மேல்பாலை.
மின்விளக்கு எப்போது சீர் செய்யப்படும்?
நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் ஜோஸ் காலனி மற்றும் ஜேசுராஜா ெதருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருக்களில் மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். சில சமூக விரோதிகளின் தொல்லைகளும் அரங்கேறுகின்றன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேவியர், தளவாய்புரம்.
விபத்தை தடுக்க தடுப்புச்சுவர்
நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து கட்டபொம்மன் சந்திப்பு செல்லும் அவ்வை சண்முகம் சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். இதனால், அச்சத்துடனே வாகனங்களை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- மணிகண்டன், மீனாட்சிபுரம்.






Next Story