மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது + "||" + 3 arrested for selling cannabis

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையில் ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலங்கன்குடியிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் செல்வநாதன்(வயது 22), சீனிவாசன் நகரை சேர்ந்த சிவாஜியின் மகன் நந்தவேல்(23), வாரியங்காவல் ராமுவின் மகன் இளையராஜா(23), தேவனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் மகன் பில்லர் என்ற பிரசாத் ஆகியோர் சீனிவாச நகர் அருகே மலங்கன்குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து செல்வநாதன், நந்தவேல், இளையராஜா ஆகியோரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பில்லர் என்ற பிரசாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது
வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
2. 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
3. திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
4. பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது
பணகுடி அருகே பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
5. கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது
அருப்புக்கோட்டையில் நடந்த துணிகர ெகாள்ளையில் கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.