லாரி மீது கார் மோதியது; ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் சாவு
விஜயாப்புரா அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
விஜயாப்புரா: விஜயாப்புரா அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
4 போ் சாவு
விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா அருகே கோனகேனஹள்ளி கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் ஒரு லாரி பழுதாகி நின்றது. பழுதை சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் வந்தது. இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் முன்பகுதியில் மோதியது. மோதிய வேகத்தில் காரும், லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
இந்த கோர விபத்தில் லாரி டிரைவர், காரில் இருந்த 3 பேர் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தாா்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினாா்கள். இதுபற்றி அறிந்ததும் விஜயாப்புரா புறநகர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவா சென்றுவிட்டு...
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வராவை சேர்ந்த பசவராஜ் முண்டவாடி (வயது 42), அவரது மனைவி சாவித்திரி (37). இவர்களது மகள் ஆராத்யா(8) என்று தெரிந்தது. லாரி டிரைவரின் பெயர், விவரம் தெரியவில்லை. மேலும் பசவராஜின் நெருங்கிய உறவினர்கள் 3 பேர் காயம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. பசவராஜ் தனது குடும்பத்தினருடன் கோவாவுக்கு சென்று விட்டு விஜயாப்புராவுக்கு காரில் திரும்பினார்.
அந்த சந்தர்ப்பத்தில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதில் 4 பேர் பலியானது தெரியவந்துள்ளது. கார் டிரைவரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story