காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை தொடங்குகிறது


காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Oct 2021 2:45 AM IST (Updated: 21 Oct 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை தொடங்குகிறது

தென்காசி:
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதிகாலை 5-30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.  திருவிழா வருகிற 1-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. உற்சவர் வீதி உலா மற்றும் சப்பர வீதி உலா அனைத்தும் கோவில் பிரகாரங்களிலேயே நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டம் மற்றும் சப்பர வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்து வருகிறார்.

Next Story