நெல்லையில் 124 போலீசார் இடமாற்றம்


நெல்லையில் 124 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Oct 2021 4:01 AM IST (Updated: 21 Oct 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 124 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டுகள், போலீஸ்காரர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் இந்த கலந்தாய்வை நடத்தினார்.

 இதைத்தொடர்ந்து தற்போது இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி, நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், நெல்லை சந்திப்பு சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 44 பேரும், போலீஸ் ஏட்டுகள், பெண் போலீசார் உள்பட 78 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Next Story