நெல்லையில் பரவலாக மழை


நெல்லையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 21 Oct 2021 4:21 AM IST (Updated: 21 Oct 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று பரவலாக மழை செய்தது.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அணைப்பகுதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அருவிகளில் தண்ணீர் கொட்டியது.
இந்த நிலையில் நேற்று காலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து பகல் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. 

Next Story