போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் மோசடி தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து கழக ஊழியர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 48). அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பழக்கமான ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் பெயரில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பணம் தேவைப்படுகிறது என்றும் பேஸ்புக் மூலம் வங்கி கணக்கு எண்ணுடன் ஒரு குறுந்தகவல் வந்ததாக கூறப்படுகிறது.
இதை நம்பிய வெற்றிவேல் அந்த வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். பின்னர் இதுகுறித்து தொலைபேசி மூலம் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் அவ்வாறு பணம் கேட்கவில்லை என்பதும், வங்கி கணக்கு எண்ணுடன் குறுந்தகவல் அனுப்பவில்லை என்பதும் தெரியவந்தது.
நூதன முறையில் மோசடி
அப்போது தான் மர்ம நபர், ஓய்வு பெற்ற அதிகாரியின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கை ஏற்படுத்தி தகவலை அனுப்பி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் இதுதொடர்பாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story