அரசு பஸ்களில் துண்டு பிரசுரங்கள்


அரசு பஸ்களில் துண்டு பிரசுரங்கள்
x
தினத்தந்தி 21 Oct 2021 5:40 PM IST (Updated: 21 Oct 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் துண்டு பிரசுரங்கள்

திருப்பூர்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25வது ஆண்டு வெள்ளிவிழா ஆண்டையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்மை மாவட்ட நீதிபதி சுவர்ணம் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிலையத்தில் மக்களை தேடி சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு விளம்பர பதாகை மற்றும் துண்டு பிரசுரங்கள் பஸ்களில் ஒட்டப்பட்டன. இந்த பணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுவர்ணம் நடராஜன் கொடியைசத்து தொடங்கி வைத்தார்.
பஸ்களுக்குள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை அவர் ஒட்டினார். 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா வரவேற்று பேசினார். முதன்மை மாவட்ட நீதிபதி பேசும்போது, நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்வு காண்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். நடத்துனர்கள், ஓட்டுனர்கள் இதுகுறித்து பயணிகளிடம் தெரிவிக்கலாம் என்றார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து வழக்கு மற்றும் இழப்பீட்டு நீதிமன்ற நீதிபதி நாகராஜன், சார்பு நீதிபதிகள் சந்திரசேகரன், பிரஸ்ணவ், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி பிரபா, விக்னேஷ் மது, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ராமநாதன், உதயசூரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

---
படம் உள்ளது
========

Next Story