காவலர் நினைவு தூணிற்கு வீர வணக்கம்


காவலர் நினைவு தூணிற்கு வீர வணக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2021 5:44 PM IST (Updated: 21 Oct 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் காவலர் வீர வணக்க நாளில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தூணிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் காவலர் வீர வணக்க நாளில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தூணிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர்.
காவலர் வீரவணக்க நாள்
லடாக் பகுதியில் கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ந் தேதி சீன ராணுவத்தினர் மறைந்து இருந்து திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 22ந்தேதி இந்தியா முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவின் அனைத்து மாநில காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசத்தை காக்கும் பணியில் 377 காவலர்கள் மற்றும் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு பாதுகாப்பு பணியில் மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் திருப்பூர் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நேற்றுகாலை நடைபெற்றது.
 வீரவணக்கம்
ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட காவலர் நினைவு தூணிற்கு மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாநகர துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினார்கள். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

---
மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, வீரவணக்கம் செலுத்திய போது எடுத்த படம்.
----


Next Story