சேதமடைந்த தரைமட்ட பாலம்
பெரியபாப்பனூத்து பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தரைமட்ட பாலம் சேதமடைந்தது. அதை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தளி
பெரியபாப்பனூத்து பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தரைமட்ட பாலம் சேதமடைந்தது. அதை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தரை மட்ட பாலம்
உடுமலைக்கு உட்பட்ட பெரியபாப்பனூத்து சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தடுப்பணைகள், நீர்வழித்தடங்கள், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
அப்போது பெரியபாப்பனூத்து பகுதியில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அது வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று பாலத்தை சீரமைக்கும் பணி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது.
தற்காலிக சீரமைப்பு பணி
அப்போது நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த பகுதியில் குழாய் அமைத்து மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாலம் சேதம் அடைந்த பகுதியில் புதிதாக கட்டித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த அடிப்பகுதியில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தரிசு நிலங்களில் உழவுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
---
பெரியபாப்பனூத்து பகுதியில் சேதமடைந்த தரைமட்டம் பாலம் சீரமைக்கப்பட்டு வருவதை காணலாம்.
----
Related Tags :
Next Story