‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் கோழிப்பண்ணையில் சூதாட்டம். அண்ணன்-தம்பி உள்பட 12 பேர் கைது


‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் கோழிப்பண்ணையில் சூதாட்டம். அண்ணன்-தம்பி உள்பட 12 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 7:08 PM IST (Updated: 21 Oct 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கோழிப்பண்ணையில் சூதாட்டம் நடத்திய அண்ணன், தம்பி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கோழிப்பண்ணையில் சூதாட்டம் நடத்திய அண்ணன், தம்பி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன் (வயது 55), பரதன் (45). அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் ஊனை பள்ளத்தூர் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர். இந்தப் பண்ணையில் கடந்த 10 ஆண்டுகளாக மனமகிழ் மன்றம் என்றபெயரில் கோர்ட்டில் அனுமதி பெற்று அதை பயன்படுத்தி கோழிப் பண்ணையில் சூதாட்டம் நடத்தி வந்துள்ளனர். 

இதனால் தினமும் கோழிப்பண்ணை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் அணிவகுத்து நின்று வந்தது. இது சம்பந்தமாக பள்ளிகொண்டா போலீசார் பலமுறை அந்தப் பகுதிக்குச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தியபோது கோர்ட்டில் வாங்கியுள்ள அனுமதி கடிதத்தை காட்டி போலீசாரை ஏமாற்றி வந்துள்ளனர்.

12 பேர் கைது

இந்த நிலையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி இந்த மனமகிழ் மன்றம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி இதுகுறித்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பட் ஜானிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிங்காரம், நந்தகோபால் மற்றும் போலீசார், வேலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்புப்படை போலீசார் சென்று கோழிப்பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த 12 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சூதாட்டத்திற்கு வைத்திருந்த ரூ.71 ஆயிரத்து 170 மற்றும் 11 செல்போன்கள், 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 விசாரணை மேற்கொண்டபோது குமரேசன் என்பவர் கோர்ட்டில் வழங்கிய அனுமதி கடிதத்தை காண்பித்து இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் 10 ஆண்டுகளாக சூதாட்டம் நடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குமரேசன், பரதன் உள்பட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story