குடிபோதையில் சாலையில் உருண்ட நபர்


குடிபோதையில் சாலையில் உருண்ட நபர்
x
தினத்தந்தி 21 Oct 2021 8:02 PM IST (Updated: 21 Oct 2021 8:02 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் சாலையில் உருண்ட நபர்

ஊட்டி

ஊட்டி கமர்சியல் சாலையில் பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த ஒருவர் திடீரென சாலையின் நடுவே படுத்தார். அவர் தனக்கு மதுபானம் வாங்கி தருமாறு கூறியபடி உருண்டு கொண்டே இருந்தார்.  இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீண்டும் சாலையில் படுத்து உருண்டார். பின்னர் ஒருவழியாக போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story