கண்மாயில் குதித்து மூதாட்டி தற்கொலை
போடி கண்மாயில் குதித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
போடி:
போடி-தேனி சாலையில் உள்ள பங்காருசாமி நாயக்கர் கண்மாயில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விைரந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போடி தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர், போடி வ.உ.சி. நகரை சேர்ந்த ராமசாமி மனைவி முத்துலட்சுமி (வயது 70) என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story