ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு


ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு  தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2021 8:15 PM IST (Updated: 21 Oct 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடி

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கவுன்சிலர்களை கடத்த முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் நேற்று முன்தினம் பதவியேற்றனர். பின்னர் வெளியில் வரும்போது, தி.மு.க.வினர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து ஒன்றிய குழு உறுப்பினர்களை கடத்தும் முடற்சியில்  ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு, போலீஸ் தடியடி நடத்தினர்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடக்கிறது. தலைவர் தேர்தல் காலை 10 மணிக்கும், துணைத் தலைவர் தேர்தல் மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது. 

கலெக்டர் ஆய்வு

இதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்தும், அங்கு வாக்குப்பதிவு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்தும் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்ரெண்டு சுப்பாராஜ், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது தகுந்த பாதுகாப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story