மாவட்ட செய்திகள்

வனக்காப்பாளரை தாக்கிய டிரைவர் கைது + "||" + Driver arrested for assaulting forest ranger

வனக்காப்பாளரை தாக்கிய டிரைவர் கைது

வனக்காப்பாளரை தாக்கிய டிரைவர் கைது
வனக்காப்பாளரை தாக்கிய டிரைவர் கைது
கூடலூர்

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனச்சரகத்தில் வன காப்பாளராக பணியாற்றி வருபவர் சங்கரன்(வயது 54). இவர் நேற்று காலை 9 மணிக்கு மசினகுடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். 

அப்போது அங்கு வந்த ஆச்சக்கரை பகுதியை சேர்ந்த டிரைவர் சாமியப்பன்(42) என்பவர் மான் வேட்டை வழக்கில் தேவையின்றி சிக்க வைத்துவிட்டதாக கூறி திடீரென சங்கரனை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மசினகுடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமியப்பனை கைது செய்தனர்.