திருச்செந்தூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


திருச்செந்தூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2021 8:45 PM IST (Updated: 21 Oct 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (வயது 34). இவர் தனது பெற்றோரிடம் நான் தொழில் செய்ய வேண்டும், எனக்கு பணம் தாருங்கள் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி மிரட்டியுள்ளார். இதனால் பெற்றோர் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து ஆட்டோவை சரியாக ஓட்டாமல் பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி தனது இடது கையில் பிளேடால் வெட்டியுள்ளார். பின்னர் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக கூறி சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனது கழுத்தில் பிளேடால் வெட்டிக் கொண்டும், சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டுல்ளார்.  சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
------------

Next Story