கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தலைமையில் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தலைமையில் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு கிழவிபட்டி பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மாள் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:-
கிழவிபட்டி பஞ்சாயத்தில் சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், அனைத்து பஞ்சாயத்து மன்ற உறுப்பினர் களின் ஒருங்கிணைப்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, பணிகள் செய்யப் பட்டு வருகிறது.
ஆனால், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பார்த்தீபன் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், அடிப்படை வசதிகள் செய்வதில் இடையூறு செய்து வருகிறார். எனவே, எவ்வித பாகுபாடும் இன்றி அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், இடையூறு ஏதும் இல்லாமல் இருப்பதற்கு ஏதுவாக ஒன்றிய அதிகாரிகள் துணைத் தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் ஓடை அமைப்பதில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story