காயல்பட்டினத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு


காயல்பட்டினத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக  போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2021 8:57 PM IST (Updated: 21 Oct 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஹபீப் முகம்மது (வயது 33). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 9.6.2020 அன்று காயல்பட்டினத்தில் புகைப்பிடித்து கொண்டு இருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஹபீப் முகம்மதுவை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் 4 போலீசார் சேர்ந்து அடித்து உதைத்து விடுவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஹபீப் முகம்மதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹபீப் முகம்மது உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில், இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் கடந்த 9.9.2020 அன்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஹபீப் முகம்மது, மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோதினி, சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story