பாணாவரம் அருகே பிறந்து 2 நாட்களேயான ஆண் குழந்தை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீச்சு
பாணாவரம் அருகே பிறந்து 2 நாட்ளே ஆன ஆண்குழந்தை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. கள்ளக்காதலில் பிறந்ததால் வீசிச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்
பாணாவரம் அருகே பிறந்து 2 நாட்ளே ஆன ஆண்குழந்தை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. கள்ளக்காதலில் பிறந்ததால் வீசிச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூட்கேசில் ஆண்குழந்தை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள தப்பூர் கிராமத்தில் ஓடை கால்வாய் அருகே மூடப்பட்ட சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சூட்கேசை திறந்து பார்த்து உள்ளனர். அதில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சூட்கேசில் நைட்டி, டவல் உள்ளிட்டவைகள் இருந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுமனுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிராமநிர்வாக அலுவலர், குழந்தையை பத்திரமாக மீட்டு பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தையின் கை மற்றும் கால் ரேகைகளை செவிலியர்கள் பதிவு செய்தனர். இது குறித்து மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த சைல்டு லைன் குழுவினரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் ராகவி, வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
கள்ளக்காதலில் பிறந்ததா?
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் தப்பூர் கிராம நிர்வக அலுவலர் சுமன் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து, சூட்கேசில் வைத்து குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story