நாமக்கல்லில் 3 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் லாரி டிரைவர் கைது
நாமக்கல்லில் 3 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் லாரி டிரைவர் கைது
நாமக்கல்:
நாமக்கல்லில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், கோவை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்படி, நேற்று அதிகாலை நாமக்கல்- துறையூர் சாலை என்.கொசவம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், சத்தியபிரபு, முரளி, போலீஸ் ஏட்டு பெரியசாமி, முதுநிலை காவலர் பூவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 ஆயிரம் லிட்டர் டீசலை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
லாரி டிரைவர் கைது
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அபிராமன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த டீசலை அவர் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் கலப்பட டீசல் உரிமையாளரான கொசவம்பட்டியை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் தலைமறைவாகி விட்டார். அவரை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
======
Related Tags :
Next Story