திருவண்ணாமலையில் நவிரம் பூங்கா அகற்றம்


திருவண்ணாமலையில் நவிரம் பூங்கா அகற்றம்
x
தினத்தந்தி 21 Oct 2021 9:54 PM IST (Updated: 21 Oct 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

நவிரம் பூங்கா அகற்றம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் போளூர் சாலையில் நவிரம் பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது.. இந்த பூங்கா குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பொதுமக்கள் பொழுது போக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் தினமும் காலை மற்றும் மாலையில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். 

இந்த பூங்கா அமைக்கப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் குளம் ஒன்று இருந்துள்ளது. அந்த குளத்தை மூடிவிட்டு அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பான குளம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நவிரம் பூங்காவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. 

Next Story