மோகனூர் அருகே, சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய தம்பி உள்பட 2 பேர் கைது


மோகனூர் அருகே, சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய தம்பி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 9:59 PM IST (Updated: 21 Oct 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே, சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய தம்பி உள்பட 2 பேர் கைது

மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் பெரியண்ண கவுண்டர். இவருக்கு பாப்பாயி (வயது 68) என்ற மகளும், கந்தசாமி (66) என்ற மகனும் உள்ளனர். பாப்பாயி தன்னுடைய தந்தைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாப்பாயியை வீட்டை காலி செய்ய கூறி அவருடைய தம்பி கந்தசாமி குடும்பத்தினர் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று பாப்பாயி வீட்டில் இருந்தபோது கந்தசாமி, அவரது மனைவி லட்சுமி, மகள் செல்வராணி, மருமகன் சுதாகர் மற்றும் உறவினர்கள் ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன், வீட்ைட காலி செய்யுமாறு தகராறு செய்தார்களாம். 
அந்த சமயம் கந்தசாமி, மருமகன் சுதாகர் ஆகியோர் பாப்பாயி வீட்டை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது. லட்சுமி, செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், மிக்சி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் மூதாட்டியை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 
இதுகுறித்து பாப்பாயி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா வழக்குப்பதிவு செய்து நாமக்கல் இ.பி.காலனியை சேர்ந்த சுதாகர், கந்தசாமி ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமி, செல்வராணி ஆகியோரை தேடி வருகிறார்.

Next Story