திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் விசாகன் உத்தரவு


திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் விசாகன் உத்தரவு
x
தினத்தந்தி 21 Oct 2021 10:02 PM IST (Updated: 21 Oct 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணியை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் 3 ரெயில் தண்டவாளங்களுக்கு மேல் ரூ.59 கோடியே 80 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி பல ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவுபெறவில்லை. இதனால் பாலகிருஷ்ணாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் நேற்று மேம்பாலம் கட்டும் பணியை திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது மார்ச் மாதத்துக்குள் மேம்பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும். இதற்காக மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கூடுதல் பணியாளர்களை கொண்டு மேம்பாலம் கட்டி முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஆர்.டி.ஓ. காசிசெல்வி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பாரத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story