வாணியம்பாடி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி டிரைவர் பலி
தடுப்புச்சுவரில் கார் மோதி டிரைவர் பலி
வாணியம்பாடி
வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சபீஷன் (29), நோவா (28), பிரசாந்த் (24) மற்றும் வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் விக்ரம்ராஜ் (30). நண்பர்களான 5 பேரும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்வதற்காக வேலூரில் இருந்து ஒரு காரில் சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அவர்கள் 5 பேரும் மது குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காரை நோவா ஓட்டினார். மற்றவர்கள் காரில் போதையில் அமர்ந்திருந்தனர். வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு முருகன் கோவில் எதிரே வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் திடீெரன சாலையில் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. அதில் விக்ரம்ராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற 4 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story