15 ஆயிரம் லிட்டர் மதுபானம்-சாராயம் அழிப்பு
நாகையில், பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் மதுபானம்-சாராயத்தை போலீசார் அழித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில், பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் மதுபானம்-சாராயத்தை போலீசார் அழித்தனர்.
கலெக்டர் உத்தரவு
நாகையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இவை நீண்ட நாட்களாக போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் விசுவதாலும், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாலும், இதனை அளித்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
15 ஆயிரம் லிட்டர் அழிப்பு
இதை தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் இருந்து 11,832 மதுபானம், 3,327 லிட்டர் சாராயம் ஆகியவற்றை நாகை பாப்பாகோவில் சுடுகாடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் கலால் துறை உதவி ஆணையர் குணசேகர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சாராயம் மற்றும் மதுபானத்தை கீழே ஊற்றி போலீசார் அழித்தனர
Related Tags :
Next Story