எருமப்பட்டி அருகே ஜெககோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? ஆடுகள் காணாமல் போனதால் விவசாயிகள் அச்சம்


எருமப்பட்டி அருகே ஜெககோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? ஆடுகள் காணாமல் போனதால் விவசாயிகள் அச்சம்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:11 PM IST (Updated: 21 Oct 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? ஆடுகள் காணாமல் போனதால் விவசாயிகள் அச்சம்

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், ஆடுகள் காணாமல் போனதாலும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். 
கால்தடம்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்தநிலையில் கொல்லிமலையை சேர்ந்த சேகர் என்பவர் ஜெககோம்பையில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவதுடன், 20-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். 
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு கட்டியிருந்த பட்டியில் சிறுத்தை போன்ற மர்மவிலங்கு புகுந்து ஆட்டை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் சத்தம் போடவே அந்த விலங்கு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதையடுத்து நிலத்தில் பதிந்த கால்தடத்தை பார்த்தபோது அது சிறுத்தை கால்தடம் தான் என்று சொல்லப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம்
மேலும் அருகில் உள்ள மணிகண்ட பிரபு என்பவரது விவசாய நிலத்திலும் சிறுத்தையின் கால்தடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஜெககோம்பையில் உள்ள வனப்பகுதியில் ஆட்ைட கொன்று அதன் கால் மற்றும் தோல் பகுதி கிடந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன. ஆடுகளை சிறுத்தை போன்ற விலங்கு அடித்து கொன்றிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல அச்ச நிலை உள்ளதாகவும், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஜெககோம்பை கிராமத்தில் சிறுத்தை உலாவது உறுதி செய்யப்பட்டால் அதனை கூண்டு வைத்து பிடித்தால் மட்டுமே நிம்மதி ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story