சட்டமன்ற தேர்தலையொட்டி பயிற்சிக்காக கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது
சட்டமன்ற தேர்தலையொட்டி பயிற்சிக்காக கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது
வால்பாறை
வால்பாறை பகுதியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கவும், வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 240 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் எந்திரங்கள் வால்பாறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த எந்திரங்கள் தேர்தல் முடிந்ததும், தாலுகா அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கோவை மாவட்ட கலெக்டருமான சமீரன் உத்தரவின் பேரில், இந்த அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த பணி தாசில்தார் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமையிலும், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
Related Tags :
Next Story