ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:55 PM IST (Updated: 21 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி, 
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவாரண தொகை
 கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், 
ெபட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி ஐந்து விளக்கு அருகே ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 
விலை உயர்வு
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி மணவழகன், முன்னிலை வகித்தார். கட்டிட தொழிலார்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவசாமி, ஏ.ஐ.டி.யு.சி. நகர் ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆட்டோ சங்க நிர்வாகிகள் பாலா, கணேசன், சரவணன், பாண்டி மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷமிட்டனர்.

Next Story