கே.வி.குப்பம் அருகே மோர்தானா அணை இடதுபுறக் கால்வாயில் உடைப்பு
மோர்தானா அணை இடதுபுறக் கால்வாயில் உடைப்பு
கே.வி.குப்பம்
குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து அணையின் இடதுபுறக் கால்வாய் மூலம் கே.வி.குப்பம் வழியே அன்னங்குடி கடைமடை வரை தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் செல்லும் கால்வாயில் கல்யாண பெரியாங்குப்பம் கிராமத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மண்சரிவால் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி மண் சரி‘ை சரிசெய்து அருகில் உள்ள மாச்சனூர் வழியே செல்லும் கானாற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கானாற்றின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பணையை உடைத்துக் கொண்டு வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அது செல்லும் வழியில் உள்ள காங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களின் வயல்வெளிகளில் வெள்ளம் நிரம்பி குளம்போல் தேங்கியது. இந்த வெள்ளநீர் கரைஓரம் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் இரவுப்பொழுதைக் கழித்தனர். இதைத் தொடர்ந்து கால்வாயை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story