பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஆசிரியர்கள் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இளையான்குடி தாசில்தார் ஆனந்த், இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனை விதைகள் நடவு செய்யும் பணியை இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாரதிகண்ணன், ஜூனியர் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் அசார், தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ், உதவி தலைமை ஆசிரியர் ராமராஜ், உடற்கல்வி இயக்குனர் இப்ராகிம் ஷா மற்றும் மாணவர்கள் மேற்கொண்டனர். 2000 பனை விதைகளை இளையான்குடி நீர்ப்பாசன கண்மாய்க்குள் நடவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் செய்திருந்தார்.
Related Tags :
Next Story