பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம். போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம். போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Oct 2021 11:49 PM IST (Updated: 21 Oct 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பணியின்போது உயிர்நீத்த 264 காவலர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வேலூர்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பணியின்போது உயிர்நீத்த 264 காவலர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காவலர்களுக்கு வீரவணக்கம்

லடாக் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள நினைவுசின்னத்தில் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மலர்வளையம் வைத்து அஞ்சலி

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையதள குற்றப்பிரிவு) சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன் (மதுவிலக்கு), மணிமாறன் (ஆயுதப்படை), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உயிர்நீத்த காவலர்களின் வீர மரணங்களை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க...

இந்தியாவில் கடந்தாண்டு தேசத்திற்காக பணியின்போது தன் உயிரை நீத்த 264 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 
அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Next Story