கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
கரூர் மாவட்டபகுதிகளில் பலத்த மழை பெய்தது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், மசக்கவுண்டனூர், காகிதபுரம், மூலிமங்கலம், மூர்த்திபாளையம், நாணப்பரப்பு, புகளூர், செம்படாம்பாளையம்,தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, பெரியவரப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணி அளவில் இடியுடன்கூடிய பலத்த மழை 1 மணி நேரமாக பெய்ந்தது. இதனால் உழவர் சந்தை உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறுபோல் தேங்கியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல் தோகைமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல் அருகே உள்ள முத்தனூர், நடையனூர், சொட்டையூர், பேச்சிப்பாறை, கரைப்பாளையம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகளூர், பாலத்துறை, மூலிமங்கலம், கொங்கு நகர், புதுகுறுக்குபாளையம், பழமாபுரம், குட்டக்கடை, புன்னம், புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், நல்லிக்கோவில், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், நொய்யல், மரவாபாளையம், குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story