தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:24 PM GMT (Updated: 21 Oct 2021 6:24 PM GMT)

தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தொழிலாளர் சங்க தேர்தல் அக்டோபர் 23-ந்தேதி நடைபெறும் என காகித ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தேர்தலை திடீரென ரத்து செய்து காகித ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த காகித ஆலை தொழிலாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் கவுரவ தலைவர் ஜுவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். குறிப்பிட்ட தேதியில் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த காகித ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story