மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு + "||" + Death

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் பரளி, ராஜேந்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் 4 ரோடு, பூங்கா நகரில் உள்ள தனது மாமா மனோகர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புஞ்சை புகளூர் அலுவலகம் அருகே சென்றபோது, வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த ஜெயலாப்தீன் (53) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து, பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிரபு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மனோகர் கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
2. பஸ் மோதி தொழிலாளி சாவு
பஸ் மோதி தொழிலாளி சாவு
3. சாலையில் இறந்து கிடந்த வாலிபர்
வாலிபர் சாலையில் இறந்து கிடந்தார்.
4. மேற்பனைக்காடு பகுதியில்20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை
மேற்பனைக்காட்டில் கடந்த சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.