மோட்டார்சைக்கிளில் சென்ற தனியார் தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலி
தனியார் தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலி
ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம் பெருமுகையை சேர்ந்தவர் சங்கர்தயாநிதி (வயது 33). இவர், ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் சிப்காட்டில் இருந்து ராணிப்பேட்டை வழியாக தனது வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை கெல்லிஸ் ரோடு அருகே வரும்போது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு டேங்கர் லாரி திடீரென சங்கர் தயாநிதி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் தலை நசுங்கி சங்கர் தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story