நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2021 12:15 AM IST (Updated: 22 Oct 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம்
நூல் விலை உயர்வை கண்டித்து  சி.ஐ.டி.யூ. சார்பில் ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
 நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் வடக்கு தெருவில் சி.ஐ.டி.யூ. செயலாளர் சக்திவேல் தலைமையில் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நூலிற்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம், மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மேலும் சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் கணேசன், விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், விசைத்தறி சங்க மாநில குழு முனியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story