பணியின்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு மரியாதை
பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
வீரவணக்கம்
பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மைதானத்தில் உள்ள போலீசார் நினைவு தூணில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட வனத்துறை அலுவலர் குகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
63 குண்டுகள் முழங்க மரியாதை
அதனை தொடர்ந்து கூடுதல் சூப்பிரண்டுகள் பாண்டியன், சுஜாதா, துணை சூப்பிரண்டுகள் சஞ்சீவ்குமார், சுப்ராமன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், ஜெயராமன், சுப்பையன், அசோகன், கலா, வாணி மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story