அன்னவாசல் அருகே குழந்தைகள் காப்பகம் நடத்தியஅரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்


அன்னவாசல் அருகே குழந்தைகள் காப்பகம் நடத்தியஅரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2021 12:36 AM IST (Updated: 22 Oct 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே குடுமியான்மலை மறிங்கிப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அன்னவாசல்:
குழந்தைகள் காப்பகம் 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக கலைமகள் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், குடுமியான்மலை மறிங்கிப்பட்டியில் டாக்டர் அவார்டு தாய் பெண் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்நிலையில் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளை ஆசிரியை கலைமகள் தன் சொந்த வயல் வேலைக்கு பயன்படுத்தி உள்ளார். 
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெண் குழந்தைகள் காப்பகத்தை மூடி சீல் வைத்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். 
பணியிடை நீக்கம்
மேலும் ஆசிரியையின் பதில் திருப்தியாக இல்லாத நிலையில், அரசு பள்ளி ஆசிரியையாக இருந்து கொண்டு பெண் குழந்தைகளை தனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தியதால் அரசுப்பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 17 (இ) படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story