வயலோகம் பகுதியில் தொடர் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வயலோகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து அண்ணாபண்ணை துணை மின்நிலைய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அன்னவாசல்:
தொடர் மின்வெட்டு
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மின்சார வினியோகம் ஒரு பகுதிக்கு மட்டும் குறிப்பாக வயலோகம் வடபாகம், தென்பாகம், முதலிப்பட்டி, மாங்குடி, பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் தொடர்ந்து தடை ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கால நீட்டிப்பு செய்துவந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து அண்ணாபண்ணை துணை மின் நிலைய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அப்பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மா தலைமையில் அப்பகுதிகளை சேர்ந்த திரளான ஊர் பொதுமக்கள் வயலோகம் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அன்னவாசல் ஒன்றிய செயலாளர் காவு நசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story