மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Daily Telegraph Complaint Box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
செடி, கொடிகள் அகற்றம்
நாகர்கோவில் ராணித்தோட்டம் அருகே வடக்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.  உடனே, மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தை ஆக்கிரமித்திருந்த செடி கொடிகளை அகற்றினர். நடவடிக்ைக எடுத்த துறையினருக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
                                     -எபின், ராணித்தோட்டம்.
பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் பார்வதிபுரம் பெருமாள் நகரில் ஜெயா தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                           -ராஜா, பார்வதிபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டுவதுடன், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குப்பகைளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                -தங்கப்பன், புரவசேரி.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
 ஏற்றக்கோடு பஞ்சாயத்திற்குட்பட்ட வீயன்னூர் மின்வாரிய அலுவலகத்திலிருந்து செவரக்கோடு முந்திரி ஆலை வழியாக செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இருட்ைட பயன்படுத்தி பலர் அந்த பகுதியில் குப்பைகளை வீசி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சாலையோரம் மின்விளக்குள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -ஜாண் லெனின், ஏற்றக்கோடு.
போக்குவரத்து நெருக்கடி
மயிலாடியில் மீன்சந்தை உள்ளது. இந்த சந்தை உள்ள தெருவில் சிலர் நான்கு சக்கர வாகனங்களை பாதையின் நடுவே இடையூறாக நிறுத்துகின்றனர். இதனால், தெருவில் மற்ற வாகனங்கள், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடையூறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். 
                                   -எம்.திருநாவுக்கரசு, மயிலாடி.
சாலையை சீரமைக்க வேண்டும்
மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட வேம்பனூர் சந்திப்பில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் இருந்து விராலிவிளை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                -மணிகண்டன், வேம்பனூர்.
எரியாத தெருவிளக்கு
தேரேகால்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாஞ்சில் நகர் 9-வது தெருவில் சாலையோரத்தில் செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. பாம்புகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்விளக்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                   -வினோத், நாஞ்சில் நகர்தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
2. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-